மூளை தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் வெட்லேண்ட் என்ற மற்றொரு புதிய வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. மங்கோலியாவில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்ற ஒருவருக்கு முதல் முறையாக வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பூங்காவிற்கு சென்றவர்களை பரிசோதித்ததில் மேலும் 17 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.