17 வயது மாணவன் வெட்டிப் படுகொலை

75101பார்த்தது
17 வயது மாணவன் வெட்டிப் படுகொலை
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டி வீதி பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (17). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்ல தனது தோழியுடன் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரணவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் சிங்காநல்லூர் டெக்ஸ்டைல் லே அவுட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், காதல் விவகாரத்தில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி