1,000 ஆண்டுகளுக்கு முன்பு உத்தமச் சோழனால் கட்டப்பட்டது மதுராந்தகம் ஏரி. 1969-ல் கடும் வறட்சி ஏற்பட்ட போது இந்திரா காந்தி இதன் சிறப்புகளை அறிந்து தூர்வார உத்தரவிட்டார். அதன் பிறகு 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி தூர்வாரப்படவில்லை. இங்கு 694 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இதன் பரப்பளவு 2,561 ஏக்கர். கடந்த 4 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஏரியைச் சுற்றியுள்ள 60 கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர்.