சபரிமலையில் அரவணைப்பிரசாதம் விலையை உயர்த்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மண்டல மகரவிளக்கு சீசனில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் நிலக்கல் உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட 6 கோயில்களில் அரவணைப்பிரசாத விலை ரூ.20 வரை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பந்தளம், எருமேலி, அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா கோயில்களில் அரவணைப்பிரசாதம் விலை ரூ.65-ல் இருந்து ரூ.85 ஆக உயர்த்தப்படும்.