'அதிமுகவுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை'

அதிமுகவுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் தயாராக இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி விரைவில் உடையும் என எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக பலருக்கும் வலைவீசுகிறார். ஆனால் யாரும் அவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. தற்போது வேலை இல்லாததால், திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என அவர் பகல் கனவு கொண்டிருக்கிறார் என்றார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி