தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அம்மா உணவகங்கள்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ல் தொடங்கப்பட்ட ’அம்மா உணவகம்’ திட்டம் ஏழை எளிய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சரியான உணவு வசதி கிடைக்க பெறாதவர்களுக்கும் இது வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த திட்டம் ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, அம்மா உணவகங்கள் திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

தொடர்புடைய செய்தி