சென்னையில் தயாராகும் புதிய 3 சக்கர (Trike) வாகனம்!

TShell Motors ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் Bad Boy எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தது 400 கிமீ ஓடும் திறன் கொண்டது. மேலும் இந்த வாகனம் 4.5 வினாடிகளுக்குள் 100km/hr வேகத்தையும், அதிகபட்ச வேகம் 200km/hr செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் வர்த்தக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த வாகனத்தின் விலை 15 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி