சூரியனிலிருந்து பல வித்தியாசமான அலைநீளம் கொண்ட கற்றைகள் வெளிவருகின்றன. இதில் குறைந்த அலை நீளம் கொண்ட நிறமான நீல நிறம் மற்ற நிறங்களைக் காட்டிலும் விரைவாக சிதறடிக்கப்படுகிறது. நீல நிறம் அனைத்து திசைகளிலும் அதிகம் சிதறடிக்கப்படுவதால் நம் கண்களுக்கு வானம் நீல நிறமாக தெரிகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது அதிக அலை நீளம் கொண்ட பிற ஒளிக்கதிர்கள் ஒளிச்சிதறல் அடைந்து வானம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக நம் கண்களுக்கு தெரிகிறது.