அதிக தனிமை மனநலனில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஆறு லட்சம் பேரிடம் 21 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் தனிமையில் இருப்பது மனச்சோர்வு பாதிப்பை 30% அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதில் விருப்பமில்லாமல் இருப்பவர்களில் 29% பேர் அல்சீமர் (மறதி நோய்), 15% அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். குறைந்த வருமானம் உடைய நாடுகளில் மனச்சோர்வு பாதிப்பு அதிகம் உள்ளது.