விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெப்பிலிங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் அயோத்திதாசர் பண்டிதர் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சமுதாய கூட கட்டிடத்தை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து D. கடமங்குளம் நான்கு வழிச்சாலை விளக்கில் ஒன்றிய பொது நிதியிலிருந்து சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் எங்களது ஊருக்கு வரும் பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்தனர். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் சிரமப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர் உடனே நிதியமைச்சர் பேருந்துகள் நேரத்தை மாற்றி இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.