சிவகாசி பட்டாசு ஆலைகளில், 'தீபாவளி' பட்டாசு தயாரிக்கும் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியிலுள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்.
தீபாவளி பண்டிகையை குதூகலமாக கொண்டாடுவதற்காக, 500க்கும் மேற்பட்ட ரகங்களில் பட்டாசுகள் மற்றும் வானவெடிகள் தயாரிக்கும் பணிகளும் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கும் இறுதிகட்ட பணிகளிலும், சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
சிவகாசியின் பிரதானமான முக்கிய தொழிலாக பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. சிவகாசி, சாத்தூர் விருதுநகர், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்தாலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் உச்சகட்ட விறுவிறுப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளுக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பல்வேறு தடைகள் இருந்தாலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பட்டாசு ஆலைகளில் வழக்கமான பட்டாசு ரகங்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிகட்ட விறுவிறுப்பில் உள்ளது.