சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்தில்13 இடங்களில் தானியங்கி மின்விளக்கு கோபுரத்தை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பல இடங்களில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாமல் இருந்தது. இது குறித்து இப்பஞ்சாயத்து மக்கள் பஞ்சாயத்து தலைவர் மாரியப்பனிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் மாறன்ஜி ஆகியோர் சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு 13 இடங்களை தேர்வு செய்து அங்கு தானியங்கி சூரிய ஒளி மின்விளக்குகள் அமைக்க முடிவு செய் யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 1 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்டமாக 4 இடங்களில் சூரிய ஒளி மின் விளக்குகள் தயாரானது. இந்த நிலையில் இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் கலந்து கொண்டு சூரிய ஒளி மின் விளக்குகளை தொடங்கி வைத்தார். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் கூறியதா வது, 13 இடங்களுக்கு தேவையான மின் விளக்குகள் தயாராக உள்ளது. அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு பகுதியிலும் பொருத் தப்பட உள்ளது. என்றார். தொடக்க விழா நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாறன்ஜி, வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், சுரேஷ், மோசஸ், ஊராட்சி மன்ற செயலாளர் ரவி ஆகியோர் இருந்தனர்.