இராஜபாளையம்: கனமழையால் சுவர் இடிந்து வாகனங்கள் சேதம்...

80பார்த்தது
இராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தனியார் வாகன காப்பகத்தின் மதில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில்10 கார்கள்,
2 ஆட்டோக்கள் சேதம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் நேற்று இரவு மூன்று மணி நேரம் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை ஆனந்த் திரையரங்கம் அருகே உள்ள தனியார் வாகன காப்பகத்தின் ஒரு பக்க மதில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவரை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சொகுசு கார்கள், இரண்டு ஆட்டோக்கள், இரண்டு டூவீலர்கள் முற்றிலும் சேதமடைந்தன. அதிகாலை நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் நகரின் முக்கிய பகுதியில் இயங்கி வரும் வாகன காப்பகத்தின் சுவர் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி