சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. பல தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனை தருகிறது. குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி பிரச்சனைக்கான காரணத்தை கண்டறியவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.