சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியோமேக்ஸின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நியோமேக்ஸ் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த FIR அடிப்படையில் விசாரணையை அமலாக்கத்துறை துவங்கியுள்ளது. சென்னை மண்டல அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் உள்ள அசையும்-அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.