Reddit எனும் சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் தான் வேலையை ரிசைன் செய்த காரணம் குறித்து பகிர்ந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது உறவினரைக் காண விடுப்பு கேட்டிருக்கிறார். அதற்கு, “நீங்களா அறுவை சிகிச்சை செய்துகொள்ள போகிறீர்கள்?, மருத்துவமனையின் GPS லொகேஷன், மருத்துவமனையில் புகைப்படங்கள் மற்றும் மருத்துவச் சீட்டை அனுப்புங்கள்” என நிறுவனம் கேட்டுள்ளது. மேலும் மோசமாக நடத்தியதால், அப்பெண் தனது பணியை ரிசைன் செய்ததாக தெரிவித்துள்ளார். அவர், யார்? எந்த மாநிலம்? என்பவை தெரியவில்லை.