ராஜபாளையம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் அதிகாரியின் அலட்சிய போக்கு. ஆத்திரமடைந்த பயணிகள், டிக்கெட் கவுண்டரை முற்றுகை.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் நேற்று செங்கோட்டை -மதுரை செல்லும் பயணிகளும்,
சென்னையிலிருந்து ராஜபாளையம் வழியாக குருவாயூர் செல்லும் பயணிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் கிராசிங்கில் கடந்து செல்லும் இரு வேறு ரயில்களில் பயணிக்க மதியம் முதல் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்தனர்.
அது சமயம் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்த ரயில்வே அதிகாரி பயணிகளிடம் டிக்கெட்டிற்க்கு பணம் வாங்க முடியாது ஆகவே பயணிகள் அனைவரும் GPay மூலம் கட்டணம் செலுத்துமாறு கூறியதாக கூறப்படுகிறது.
ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் இருந்து வயதானவர்கள் பட்டன் செல் பயன்படுத்தும் பயனாளிகள் அதிகம் இருந்தாலும் ரயில்வே அதிகாரி கூறியபடி G Pay பணம் செலுத்த முடியாது உரிய பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் வழங்குமாறு கூறி உள்ளனர். ஆனால் ரயில்வே அதிகாரி டிக்கெட் வழங்க முடியாது என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிக்கெட் கவுண்டரை முற்றுகையிட்டு டிக்கெட் வழங்கும் ரயில்வே அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மீண்டும் அங்கு வந்த டிக்கெட் வழங்கும் அதிகாரி பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் வழங்கியுள்ளார்.