நீட் தேர்வுக்கு எதிராக விஜய் கருத்து - திருமா பாராட்டு

80பார்த்தது
நீட் தேர்வுக்கு எதிராக விஜய் கருத்து - திருமா பாராட்டு
நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசிய கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நீட் தொடர்பாக விஜய் முன்வைத்த கருத்துகளை வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. அந்த வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார்” என்றார். முன்னதாக மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி