மூதாட்டி கொலையில் வாலிபர் கைது!

74பார்த்தது
வேலூர் குடியாத்தம், தரணம் பேட்டை பஜார் பகு தியில் அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை போட்டு கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளியை அம்மணாங்குப்பம் பகுதியில் வைத்து பிடித்தனர்.

அப்போது அவர் பிச்சனூர் பேட்டை பாரதிதாசன் தெருவை சேர்ந்த தரணி (34) என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி