ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திவெட்டு

69பார்த்தது
கே வி குப்பத்தை அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசு இவரின் மகன் ராம் ராஜ். இவர் லத்தேரியை அடுத்த எம்ஜிஆர் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று சாப்பிட சென்றார். அப்பொழுது அதே ஹோட்டலில் அன்னங்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ், லோகேஷ், கபிலன், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆர்திஸ் ஆகியோர் நான்கு பேரும் சாப்பிட சென்றனர். அப்பொழுது ராம்ராஜ்க்கும் மற்ற நான்கு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அவர்கள் கத்தியால் ராம்ராஜை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே ராம்ராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இது பற்றி தகவல் அறிந்து லத்தேரி போலீசார் ராமராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆர்தீஸ், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :