மாவட்ட ஆட்சியரிடம் பாதிரியார்கள் கூட்டாக புகார் மனு

3669பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசம் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்து வருகிறது. அதில் விவசாயம் வேளாண்மை மற்றும் கல்வி, சமூகப் பணி மாணவர்கள் விடுதி கைவிடப்பட்ட (அனாதை இல்லம்) மாணவர்கள் இல்லம், முதியோர் மறுவாழ்வு விடுதி, முதியோர் இல்லம் மற்றும் துவக்கப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி, கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் இயங்கி வருகிறது.

பூர்வ காலமாக கிறிஸ்தவ திருச்சபைக்கு குறிப்பாக வேலூர் பேராயத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் திடீரென்று விஷமிகள் வேறொரு மதத்தின் சாமி சிலையை அங்கு வைத்து பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். மேலும் அந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்றும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அந்த ஆக்கிரமிப்பிற்கு காரணமானவர் தற்போது ஆளும் கட்சி சேர்ந்தவர் என்றும் பல்வேறு இடங்களை இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மேல் எழும்பிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கிறிஸ்துவ தென்னிந்திய திருச்சபையின் ஒட்டுமொத்த பாதிரியார்கள் கூட்டாக இன்று வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த இடத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும் வேறு யாரும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் அதற்கேற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்தமாக வந்து மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி