கட்டப்பட்ட வாரச்சந்தை -எம். எல். ஏ. திறந்து வைப்பு!

77பார்த்தது
கட்டப்பட்ட வாரச்சந்தை -எம். எல். ஏ. திறந்து வைப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுகுடியானூரில் ரூ. 42 லட்சம் மதிப்பில் 32 கடைகள் கொண்ட வாரச்சந்தை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. கொடைக்கல் ஊராட்சிமன்ற தலைவர் வே. ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயஸ்ரீ, காங்கிரஸ் நகர தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சசிகலாகார்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். முனிரத்தினம் கலந்து கொண்டு வாரச்சந்தையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, பொதுமக்களுக்கும், ஊராட்சி பணியாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது, இந்த வாரச்சந்தையில் அப்பகுதி விவசாயகள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சோளிங்கர் காங்கிரஸ் ஒன்றிய செயலாளர் வி. கார்த்திக், தொகுதி பொறுப்பாளர் ஏ. எஸ். ராஜா, ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், அசோகன், வார்டு உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கொடைக்கல் தி. மு. க. மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி