கருத்தரிப்பில் சிக்கலா? வாழ்க்கை முறையை மாற்றுங்கள்..!

79பார்த்தது
கருத்தரிப்பில் சிக்கலா? வாழ்க்கை முறையை மாற்றுங்கள்..!
சிலருக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இருந்தாலும் மாறிவரும் உணவு பழக்கம் வாழ்க்கை முறையால் கருத்தரித்தல் தள்ளிப் போய்க்கொண்டே வரும். எனவே கருத்தரித்தலை அதிகரிக்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ளுதல் அவசியம். சூரிய ஒளியில் தினமும் 15 நிமிடங்களாக செலவிட வேண்டும். காஃபின் அதிகப்படியாக இருக்கும் காபி போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். தினமும் எழுந்த பின்பும், உறங்குவதற்கு முன்பும் யோகா செய்ய வேண்டும். மது புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.