ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். அந்த பேஸ்ட்டை கறை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேவையில்லாத டூத் பிரஸ் கொண்டு மெதுவாக தேய்க்கவும். பிறகு ஈரமான துணியால் துடைக்க வேண்டும். பின் சூடான நீரால் துடைக்கவும். இப்போது பார்த்தால் எண்ணெய் கறை நீங்கி இருக்கும். மேலும், எலுமிச்சை சாறு & ஷாம்பூ கலவையை கொண்டும் எண்ணெய் கரையை நீக்கலாம்.