வாக்கு சாவடிகள் மறு சீரமைப்பு குறித்த ஆய்வு

65பார்த்தது
வாக்கு சாவடிகள் மறு சீரமைப்பு குறித்த ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16. 09. 2024) வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு 2024 முன்மொழிவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்குதல், வாக்குச்சாவடி மையங்களின் அமைவிடம் மாறுதல், பெயர் மாறுதல் போன்ற முன்மொழிவுகள் அனுப்புதல் உள்ளிட்டவை குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி