திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்கால் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.