உடுமலை: மக்கள் தொடர்பு முகாம்- கோட்டாட்சியர் பங்கேற்பு

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய பாப்பனுத்து ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் என். குமார் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து அரசுத்துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதை பெறுவதற்கான தகுதி மற்றும் வழிமுறைகள் குறித்தும் மாவட்ட, வட்டார அதிகாரிகள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். 

அதைத் தொடர்ந்து 127 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 79 ஆயிரத்து 613 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு நடைபெற்றது. முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, தாட்கோ, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகள் மூலமாக பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. முகாமில் உடுமலை தாசில்தார் கவுரிசங்கர், சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் விவேகானந்தன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி