உடுமலையில் மதுபானக்கூடம் அகற்ற கோரி சாலை மறியல் 30 பேர் கைது

1894பார்த்தது
உடுமலை தாராபுரம் சாலையில் 4-வது வார்டு யூ எஸ் எஸ் காலனி குடியிருப்புக்கு அருகாமையில் தனியார் மதுபானக்கூடம் செயல்பட்டு வருகின்றது இதனால் குடிமகன்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெண்களை தகாத வார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று மது அருந்திவிட்டு வந்த நபர் அருகில் உள்ள வீட்டிற்கு முன்பு சிறுநீர் கழித்து கொண்டு இருந்து நபரை அப்பகுதியைச் சேர்ந்த நபர் கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் மதுபான கூட்டத்தில் பணிபுரிந்த 20க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வீரமுத்து என்பவரை சரமாரியாக தாக்கி நிலையில் படுகாயம்
அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100 மேற்பட்டோர் மதுபான கூடத்தில் சென்று நாற்காலிகள் தண்ணீர் கேன்கள் மற்றும் பலகையை அடித்து நொறுக்கினர். பின்னர் உடுமலை தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த உடுமலை டிஎஸ்பி தலைமையில் சுகுமாறன் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தனியார் மதுபான கடையை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் கலைய மாட்டோம் என கூறிய நிலையில் வலுக்கட்டாயமாக கர்ப்பிணி பெண் கோபிகா உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்களை காவல்துறையினர் கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you