காங்கேயத்தில் நகர அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

4205பார்த்தது
திமுக அரசை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும்,  தமிழகம் போதை பொருட்களின் தலைநகர
மாக மாறி வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும்,போதைபொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே போதை பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுபடுத்த வேண்டும் எனவும் அதிமுக நிர்வாகிகள்சார்பில் காங்கேயத்தில் மனித சங்கிலி போராட்டம் 
நடைபெற்றது.  

மேலும் போதை பொருட்களினால்ஏற்பட கூடிய ஆபத்துகளில் பாலியல் வன்கொடுமையும் அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் வெளிநாட்டு பெண் கற்பழிப்பு,  புதுச்சேரி சிறுமி பாலியல் மற்றும்கொடூர கொலையை அடுத்து வெள்ளகோவிலில் நடந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை செய்த அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவன்மையாக கண்டித்தும் இந்த போராட்டத்தைதிமுகவை எதிர்த்து மிகப்பெரிய அளவில் நடத்தினர்.  

பேருந்து நிலையம் முதல் காவல் நிலைய ரவுண்டானா வரையிலும் 500 பேருக்கும் மேலாக கைகளை கோர்த்துக் கொண்டும்,  கோசங்களை எழுப்பியும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :