பூனைக்காக தாக்குதல் தந்தை மகன் கைது

55பார்த்தது
பூனைக்காக தாக்குதல் தந்தை மகன் கைது
திருச்சி வரகேனரி வடக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பனையடியான்(57). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் திருவிஜயன்(41) சில நாட்களுக்கு முன் பனையடியான் வீட்டின் அருகே பூனை ஒன்று இறந்து கிடந்தது. இதைக் கண்ட பனையடியான், பூனையை திருவிஜயன் அங்கு போட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்து, பனையடியான் மற்றும் அவரது மகன் கதிரேசன்(26) திருவிஜயனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் திருவிஜயன் புகாா் அளித்தார், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தந்தை மகனான பனையடியான், மற்றும் கதிரேசனை கைது செய்தனர்.

டேக்ஸ் :