தொட்டபெட்டா காட்சி முனை இன்று (ஆகஸ்ட் 20) முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. லகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம் புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமாகவும் அமைந்துள்ளது. தற்போது தொட்டாபெட்டா செல்லும் சாலையில் சுங்கச்சாவடி, ஃபாஸ்டேக் அமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.