தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அயன் பொம்மையாபுரம் பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை இவரது மனைவி சந்தன செல்வி இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அண்ணாதுரை நாகப்பட்டினம் மாவட்டம் பெர்க்னீட் என்பவரது விசைப்படகில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இந்த விசைப்படகு குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் தொழில் செய்து கொண்டிருக்கும் போது கடந்த 22ஆம் தேதி பிற்பகலில் தொழில் செய்து கொண்டிருக்கும் போது அண்ணாதுரை கடலில் வலையில் சிக்கி தவறி விழுந்துள்ளார் இதைத்தொடர்ந்து படகில் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்த அண்ணா துரையை தேடும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் இதுவரை அண்ணாதுரை கிடைக்கவில்லை மேலும் இது தொடர்பாக கடலோர காவல் படை மீன்வளத்துறை ஆகியவற்றிற்கு புகார் அளித்தும் இதுவரை அண்ணா துரையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து கடலில் தவறி விழுந்த அண்ணா துரையை கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி சந்தன செல்வி மற்றும் உறவினர்கள் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க கதறியபடி தனது கணவரை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது கணவரை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.