மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாக்லேட் பலூன் கொடுத்து வரவேற்பு

84பார்த்தது
தூத்துக்குடி: கோடை விடுமுறைக்கு பின்பு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது இதை தொடர்ந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக சென்றனர் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சாக்லேட் மற்றும் பலூன் கொடுத்து உற்சாக வரவேற்பு


தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்பு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது இதை அடுத்து பள்ளிகளுக்கு இன்று மாணவ மாணவிகள் புத்தாடை அணிந்து உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் பெருமக்கள் இனிப்பு மற்றும் பலூன் ஆகியவற்றை வழங்கி மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கோடை விடுமுறைக்குப் பின்பு பள்ளி திறந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நண்பர்கள் மற்றும் புதிய ஆசிரியர்களை பார்ப்பது சந்தோஷமாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி