தூத்துக்குடி; திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தபடும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை மேலும் வருவாய் துறை காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் பணிச்சுமை உள்ளிட்டவைகளை கண்டித்து ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம் கோவில்பட்டி திருச்செந்தூர் விளாத்திகுளம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று பணிகளை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர் வருவாய்த்துறை ஊழியர்களின் இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் வருவாய் துறை பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.