இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

83பார்த்தது
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
மீஞ்சூர் ஒன்றியம், வஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆசானபூதுார் கிராமத்தில் உள்ள, 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதமடைந்து கிடக்கிறது.

கான்கிரீட் துாண்களில் சிமென்ட் பூச்சுக்கள் கொட்டியும், விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளன. தொட்டியின் அடிப்பகுதியும் சேதமடைந்து குடிநீர் கசிந்து வருகிறது.

இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து, நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அதை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அசம்பாவிதங்கள் நேரிடும் முன் அதை முழுமையாக இடித்து அகற்றி புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி