பெரியகுளம் வடுகபட்டி பிரதான சாலையில் ஆண்டிப்பட்டி சென்ற அரசுப் பேருந்து மோதி முதியவர் ஒருவர் கால்கள் நசுங்கி பரிதாபமான முறையில் நேற்று(நவம்பர் 20) இரவு உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதியவர் குறித்த விபரங்கள் தெரியவரவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.