வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் சினிமா பாடல் பாடியுள்ள கானா பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நல்லுவை, பெரியகுளம் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி தலைமையில் தேனி மாவட்ட ஊராட்சிகள் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் சந்தித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கானா பாடகி இசைவானி இந்துமத கடவுளான ஐயப்பன் குறித்த அவதூறு பாடலை வெளியிட்டுள்ளதை கண்டித்தும், இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் மனு அளித்தனர். 

மேலும் பாடகி இசைவானியின் புகைப்படத்தை கிழித்து எரித்தனர். இந்நிகழ்வின் போது பெரியகுளம் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி