ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அயலான்'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஏலியனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் 'அயலா அயலா' என்ற பாடல் வெளியாகவுள்ளது.