இளம் பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

79பார்த்தது
இளம் பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து இளம் பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவிடைமருதூர், பிப். 19-
கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி தமிழரசி வயது 31. தமிழரசியின் தாய்மாமன் முத்துக்கிருஷ்ணன். இவர்களிடையே இடப்பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தங்கதுரை மற்றும் கனகராஜ் மீது நேற்று வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழரசி எனது அண்ணன்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக திருவிடைமருதூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் சாலையில் அமர்ந்து கோஷம் போட்டார் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடன் அங்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் தமிழரசி இடம் சமாதானம் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி