திருபுவனம் பேரூராட்சியில் உள்ள திகோ சில்க்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனைவரி தோராய பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் திருபுவனம் கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பட்டா இல்லாமல் குடியிருந்து வந்த குடும்பங்களுக்கு அரசாணையின் அடிப்படையில் திருபுவனம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலுவையினம் என்ற வகைபாடுடைய ஸ்தலத்தை அரசு புறம்போக்கு நத்தம் என வகைமாற்றம் செய்து 266 உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏற்கனவே 20 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டநிலையில் இன்று மீதமுள்ள 150 நபர்களுக்கு தோராய பட்டாவை மொத்தம் ரூ. 31 கோடியே 76 இலட்சத்து 24 ஆயிரத்து 440 மதிப்புள்ள மனைவரி தோராயப்பட்டாக்களை பொதுமக்கள் பயனடையும் வகையில் அரசு தலைமை கொறடா கோ. வி. செழியன் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, திருபுவனம் பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, திருபுவனம் பேரூர் செயலாளர் பஞ்சநாதன், திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.