சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

557பார்த்தது
சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
தஞ்சை மாவட்ட அரசு பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது.
மாவட்ட தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். சரஸ்வதி மகால் நுாலக பணியாளர் சங்க செயலர் நேரு, சத்திரம் நிர்வாக பணியாளர் சங்க தலைவர் சிவகாசி, செயலர் கருணாநிதி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் அய் யம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் முரளிக்குமார் வரவேற்றார். மாநில செயலர் முருகக்குமார், ஆலோசகர்கள் தரும் கருணாநிதி, செல்வராஜ், சக்கரவர்த்தி ஆகியோர் பேசினர். சரஸ்வதி மகால் நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும், அங்கு தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருவோரை நிரந்தரப்படுத்த வேண்டும், சத்திரம் நிர்வாகத்தில் அழிந்துவரும் சொத்துக்களை பாதுகாக்க துணை கலெக்டர் நிலையில் ஒருவரை நிர்வாக அலுவலராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின. மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி