விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா

55பார்த்தது
விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா
குடந்தை அருகே தேனாம்படுகை
விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக், மேல்நிலைப்
பள்ளி 17ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர்
ராமலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் மீனாட்சி
முன்னிலை வகித்தார். ஆசிரியை ஸ்ரீ பிரியதர்ஷினி
ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு தனியார்
பள்ளிகள் தாளாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்
பாஸ்கர், கிரேட் டேலண்ட் அபாகஸ் நிறுவனர்
ஞானசேகரன் ஆகியோர் பேசினர். சூரியனார்கோவில்
ஆதீனம் 28வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க
தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பள்ளியில் சிறப்பிடம்
பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள்
வழங்கி ஆசி உரையாற்றினார். மாணவ, மாணவிகளின்
பல்சுவை நடனம், நாடகம் உள்ளிட்ட கலை
நிகழ்ச்சிகளும், கராத்தே, சிலம்பு உள்ளிட்ட வீர
விளையாட்டுகளும் நடந்தது. ஆசிரியர் துர்கா
வரவேற்றார். ஆசிரியர் ரக்ஷகி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி