மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, 2026 தேர்தல், உலக தாய்மொழி தினம், தவெக அரசியல் வருகை ஆகியவற்றை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. #GetOutModi, #GetOutStalin, #TVKforTN, #தமிழ்வாழ்க போன்ற தமிழக அரசியல் தொடர்பான ஹேஷ்டேக்குகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்பிற்கு எதிராகவும் திமுக மற்றும் பாஜக இருவரும் மாறி மாறி ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.