வறட்சி நீடிப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது

65பார்த்தது
வறட்சி நீடிப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29 வது கூட்டம் இன்று (ஏப்ரல் 4) டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூட்டத்தில் கர்நாடகா தரப்பு பதில் அளித்துள்ளது. மேலும் நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 3.6 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விட தமிழ்நாடு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி