முதுமலை புலிகள் காப்பகத்தில் செந்நாய்களுக்கு தோல் பாதிப்பு

51பார்த்தது
முதுமலை புலிகள் காப்பகத்தில் செந்நாய்களுக்கு தோல் பாதிப்பு
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட செந்நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரோமங்கள் உதிர்ந்த நிலையில், உடல் மெலிந்து செந்நாய்கள் காணப்படுகின்றன. நாய்களுக்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருக்குமா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு வன உயிரின தலைமை பாதுகாப்பத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி