150 ஆண்டுகள் பழமை வாய்ந்த உ. சிறுவயல் கோவில் கும்பாபிஷேக விழா

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது உய்யங்கொண்டான் சிறுவயல். இக்கிராமத்தில்150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரத்தார் கோவிலான சௌந்தர்யநாயகி அம்பாள் உடனாய அயிராவதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக கோவில் கோபுரங்கள், கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டு கடந்த 10 ஆம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, தன பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு காலயாக பூஜைகள் சிறப்பாக நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் யாக தீர்த்த குடங்களை தலையில் சுமந்து கொண்டு கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

பின்பு ராஜகோபுரம் உள்ளிட்ட 33 கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலை சுற்றி நின்று குடமுழுக்கு விழாவினை கண்டுசுவாமி தரிசனம் செய்தனர் உய்யக்கொண்டான் சிறுவயல் நகரத்தார்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி