தமிழக கூட்டுறவுத்துறை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார்.
தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் குடும்பத்தினரோடு சாமி தரிசனம் செய்தார். உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை முன்பு சாமி தரிசனம் செய்த அவர் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார். தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.