பேருந்துமுன்பதிவு செய்ய நான்குமணி நேரத்திற்கு காத்திருப்பு

80பார்த்தது
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம் கோட்டம், ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையிலிருந்து சென்னைக்கு 8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அரசு பேருந்தில் செல்ல முன்பதிவு செய்வதற்காக, இன்று, அதிகாலை 4 மணி முதல் 400க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கின்றனர்.
காலை, 6: 00 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில் 400க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பேருந்து பயணிகள் கூறும்போது,
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கூடுதல் பேருந்து இயக்கப்படும் நிலையில் மற்ற பகுதிகளில் உள்ளது போல் கணினி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை கொண்டு வர வேண்டும் என, ஆத்தூர் பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி