தேசத்தின் துயரக் குரல் - பிரகாஷ்ராஜ் பகிர்ந்த வைரல் வீடியோ

75பார்த்தது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் 'தேசத்தின் துயரக் குரல்' என்ற தலைப்பில், ஒப்பாரி வடிவிலான பிரச்சாரப் பாடல் வெளியாகி, இந்திய அளவில் வைரலாகி வருகிறது. நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இப்பாடலை நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி