திருப்பூர் மாவட்டம் கோர்ட் வீதி ரயில்வே சுரங்கம் அருகே பைக்கில் அதிவேகமாகச் சென்ற பாலாஜி (25) என்ற இளைஞர், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதினார். இதனால், நிலைதடுமாறிய அவர் பக்கவாட்டில் சாய்ந்தபோது எதிர்த்திசையில் வந்த லாரி, அவரது தலை மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.